நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி – சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார் !

0
260
nazarath

நாசரேத்,டிச.24:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், விதவைகள்,திருநங்கைகள்,ஏழை,எளிய மக்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதிகளை சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம்,நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியஸ்தாபனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு 10-வது ஆண்டாக புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார்.சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமார் சிறப்பு சாட்சி கொடுத்தார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், விதவைகள்,திருநங்கைகள் ஏழை, எளிய மக்கள் என வருகைதந்;த 10 ஆயிரம்பேர்கள் மத்தியில் சகோ.மோகன் சி. லாசரஸ் சிறப்பு கிறிஸ்துமஸ்செய்திகொடுத்து பிரார்த்தனை செய்து கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கினார்.

மேலும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதியோர்கள்,விதவைகள் திருநங்கைகள்,கணவனால் கைவிடப்பட்டவர்கள்,தர்மம் எடுத்து பிழைப்பு நடத்துப வர்கள் ஏழை,எளியவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் வெகுமதியான புத்தாடைகளை பெற்றுக்கொண்ட பின்னர் வந்திருந்த அனைவருக் கும் அறுசுவை அசைவ உணவு பரிமாறப்பட்டு அருந்தி சென்றனர்.இந்நிகழ்ச்சியில் சகோதரர் மோகன் சி. லாசரஸ்,அவரது மனைவி சகோதரி ஜாய்ஸ்லாசரஸ் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் உடன்; ஊழியர் சகோதரர் அப்பாத்துரை, ஆகி யோர் 3 இடங்களில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் வெகுமதிகளை வழங்கினர்.

நாலு மாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் நடைபெறும் புதுவாழ்வு குழந்தை கள் காப்பகம் மூலம் பராமரிக்கப்படும் குழந்தைகளில் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 2 மாணவிகள் கல்லூரி செல்வதற்கு வசதியாக 2 (யமஹா ரே செட்) இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.மேலும் இரண்டு மாற்றுத்திறனாளி களுக்கு மாற்றுத்திறனாளிவாகனமும் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை நாலு மாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலாளர் செல்வக்குமார் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here