மயான மேற்கூரை இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு – உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் சம்பவம்

0
102
accident

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு நடந்த சோகம்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத்நகர் பகுதியில் மயானம் ஒன்றில் நடந்த இறுதிச்சடங்கில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பலத்த மழை பெய்தது. அதனால் இறுச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்த மாயானத்தின் கட்டிடத்திற்குள் ஒதுங்கினர்.

அப்போது எதிர்பாரா விதமாக திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனே மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் 38 பேர்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் 17 பேர் ஏற்கனவே இறந்திருந்தனர். மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயமைந்தவர்களுக்கு விரைந்து உதவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here