வல்லநாட்டில் 4-வது தேசிய சித்த மருத்துவ தின விழா

0
123
sidha news

தூத்துக்குடி,ஜன.03:

வல்லநாட்டில் நான்காவது தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி , கண் பரிசோதகர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சித்தர்களின் தலைவராம் அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்யம் மார்கழி மாதம் நாடெங்கும் தேசிய சித்தர் தினமாக கொண்டாடப்படுகிறது.நிகழ்ச்சியில் பேசிய சித்த மருத்துவர் செல்வ குமார் சித்தர்கள் நோயின்றி, நரை திரை மூப்பு இன்றி, நீண்டகால காலம் வாழ , அருளிய ஆரோக்கிய வாழ்வியல் முறைகளை விரிவாக எடுத்துக் கூறினார், நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சித்த மருத்துவ விழிப்புணர்வு பதாகைகள், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன, நிலவேம்பு குடிநீர் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது, முடிவில் சுகாதார ஆய்வாளர் சாகிர்கான் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் வெங்கடேசன் தலைமையில் வேம்பன்,மேரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here