முதல்வர், துணை முதல்வருக்கு வாகைக்குளம் விமான நிலையத்தில் வரவேற்பு

0
55
admk

தூத்துக்குடி, ஜன.4:

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு வாகைக்குளம் விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விமானம் மூலமாக தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தனர்.

வாகைக்குளம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மற்றும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான கடம்பூர்ராஜூ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதுபோன்று, வாகைக்குளம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here