கேரளாவிலிருந்து தமிழகத்துக்குள் கோழிகள், வாத்துக்கள் கொண்டு வர தடை

0
129
news

கேரளாவிலிருந்து தமிழகத்துக்குள் கோழிகள், வாத்துக்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள், வாத்துக்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவைகளை பரிசோதனை செய்து பார்த்தபோது அதில் சில பறவை காய்ச்சலை உண்டாக்கும் எச் 5 என் 8 என்கிற வைரஸ் இருப்பது தெரியவந்தது.

மேலும் பறவை காய்ச்சல் பறவாமல் தடுக்க12 ஆயிரம் வாத்துக்கள் கொல்லப்பட்டன. 36 ஆயிரம் வாத்துக்களை கொல்ல முடிவு செய்யபட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்துக்குள் பரவை காய்ச்சல் பறவாமல் தடுக்க கேரளவிலிருந்து தமிழகத்துக்கு வாத்து மற்றும் கோழிகளை கொண்டு வர தமிழக கால்நடைத் துறை தடை விதித்திருக்கிறது. அதையும் மீறி கொண்டுவரும் கோழிகள், வாத்துக்களை அப்படியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் இந்த தீவிர கண்காணிப்பை தீவிரபடுத்த கால்நடைத்துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here