”விவசாயி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றும் கூட்டம் எடப்பாடி கூட்டம்” – அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தடாலடி!

0
84
dmk anitha
????????????????????????????????????

நாசரேத்,டிச.06:

விவசாயி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றும் கூட்டம்தான் எடப்பாடி கூட்டம் என மூக்குப்பீறி கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் பேசினார்.

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக நடத்தி வரும் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் மூக்குப்பீறி கிராமத்தில் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியதிமுகசெயலாளர் நவீன்குமார் தலைமையில் நடை பெற்றது.திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், மாவட்ட திமுக பொருளாளர் வி.பி.இராமநாதன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏ.பி.சதீஸ்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் பரமன்குறிச்சி, கிங்ஸ்டன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளைக்கழக செயலாளர் அருள்ராஜ் வரவேற்று பேசினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது:- வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முழுவதும் ரத்துசெய் யப்படும்.விவசாயி,நான் விவசாயிகளின் நண்பன், தோழன் என்றெல்லாம் பேசி வரும் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டத்தை ஆதரித்து விட்டு பக்கம்,பக்கமாக விவசாயி வேடம் போட்டு விளம்பரம் தேடும் கூட்டம்தான் எடப்பாடிக் கூட்டம். தமிழகத்தில் முதல்வராக பெருந்தலைவர் காமராஜர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போன்றவர்கள் ஆண்டபோதெல்லாம் அவர்கள் இந்தளவு விளம்பரங்கள் தேடியதில்லை.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் வேலுமணி அவர் வகித்து வரும் துறையில் தெரு விளக்கு வாங்கியதில் 35 ரூபாய்க்கு வாங்கிய பல்புக்கு ரூபாய் 1500 பில் வைத்துள்ளனர். மக்கள் பணத்தை சுருண்டும் கும்பலை அடையாளம் கண்டு வருகின்ற தேர்தலில் தளபதியை முதல்வராக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம்.ஊழல் அற்ற தமிழகம் உருவாக திமுகவை ஆதரித்து தளபதியை முதல்வராக்க அனைவரும் சபதமேற்போம்.அதிமுகவை நிராகரிப்போம் என பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கல்லை சிந்தா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ், நாலுமாவடி ஊராட்சி செயலாளர் செந்தில், மாவட்டபிரதிநிதி அன்புதங்கபாண்டியன், நாசரேத் நகர திமுக செயலாளர் ரவி செல்வக்குமார்,மாற்கு ஜாண்சன்,ஜகான், கோயில்ராஜ், விஜயன், செல்வக்குமார், விக்டர், ராபின், மகாராஜன், சின்னத்துரை, ஆபிரகாம் ராதா, சுரேஷ், பால்சாமி, துரை, தியாகராஜன், சாமுவேல், வழக்கறிஞர் கிருபாகரன், திருமறையூர் அண்ட்ரூஸ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர் உள்பட ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here