நாசரேத்,ஜன.06:
நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். செயலர் நவநீதன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திருநீலகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் கலந்து கொண்டு 170 மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இதில் குரும்பூர் எஸ்.ஐ தாமஸ், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், அசோக்ராஜ், தொடக்கப்பள்ளி செயலர் கலைராஜன், ஊர் பிரமுகர்கள் தாமோதரன், தனசேகரன், சுதாகரன், குணசேகர், ரமேஷ், லோகநாதன், சேர்மதுரை, சதிஷ்குமார், மனோஜ்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் திருநீலகண்டன் செய்திருந்தார்.