”தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவேன்” – அமிர்தராஜ் பேட்டி

0
120
congress

ஏரல், ஜன.06-

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்துவேன் என தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஊர்வசி அமிர்தராஜ், சுற்றுப்பயணத்தில் போது தெரிவித்தார்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார் ஊர்வசி அமிர்தராஜ். தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அமிர்தராஜ், இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முதலாவதாக பழையகாயல் வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அங்கு காங்கிரஸ் கொடியேற்றினார். பெண்களுக்கு இலவச சேலை, ஆண்களுக்கு இலவச வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

’’இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி பாடுபடும். குறிப்பாக இளைஞர்களை படித்தவர்களாக்க அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு பெற்று தரப்படும் என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், ‘’என்னை தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்ய சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் பரிந்துரை செய்த மாநில தலைவர் அழகிரி, பாராளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக் தாகூர் எம்.பி. ஆகியோருக்கு நன்றி.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்த பாடுபடுவேன். தற்போது தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க அரசு வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இதனால் வரும் சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். குறிப்காக தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கைப்பற்றும். மேலும், இப்பகுதியில் வாழை விவசாயிகளுக்கு ஒரு ஆதாரம் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் வருங்காலத்தில் செய்து தரப்படும்’’ என்றார்.

அவருடன் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தாசன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் துரை, காங்கிரஸ் எடிசன், முன்னாள் ஒ.பி.சி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், கவுன்சிலர் பாரத், காங்கிரஸ் பிரமுகர்கள் அருளையா, சித்திரை, ஜெயராஜன், ஆனந்த், முத்துக்குமார், ரவீந்திரன், காமராஜ், அந்தோணி காந்தி, தியாகராஜ், சாந்தகுமார், கிருஷ்ணன், சுப்பிரமாணியன், அந்தோணி தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டாரத்தில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த அமிர்தராஜ், ஆழ்வார்த்திருநகரி கிழக்கு வட்டாரம், திருச்செந்தூர் வட்டாரம்,உடன்குடி வட்டாரம் பகுதியில் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here