தூத்துக்குடியில் பெண் ஒருவரை காணவில்லை – போலீஸார் விசாரணை

0
67
missing news

தூத்துக்குடி, ஜன.07:

தூத்துக்குடியில் பாலிபேக் கம்பெனியில் வேலைபார்த்த பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகள் செல்வலட்சுமி (17), எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் பாலிபேக் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 5ம் தேதி வேலைக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தந்தை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here