தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 14 பவுன் செயின் பறிப்பு – 2 பேரை போலீஸ் தேடுகிறது

0
9
news

தூத்துக்குடி,ஜன.07:

தூத்துக்குடியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி ரதிமணி (73), இவர் நேற்று மாலை, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேக்கரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மாயமாகினர். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here