தூத்துக்குடி,ஜன.07:
புதுக்கோட்டை தனியார் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சூரங்குடி கீழத் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் கிருஷ்ணமூர்த்தி (44). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர் இன்று (05.01.2021) புதுக்கோட்டை சத்திரம் பேருந்து நிலையம் அருகே பேருந்தை இயக்கி வந்தபோது, அங்கு வந்த புதுக்கோட்டை நேரு நகரைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் முருகேசன் (39) என்பவர் மதுபோதையில் கிருஷ்ணமூர்த்தியிடம் தவறாக பேசியதுடன் பேருந்தின் சைடு கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தார்.