தூத்துக்குடி பள்ளி மாணவர்களுக்கு சி.த.செல்லபாண்டியன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்

0
129
s.t.sellapandian

தூத்துக்குடி, ஜன.7:

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் ஜெயமணி வரவேற்றார். விழாவில், வேளாண் விற்பனை குழு தலைவரும், பள்ளி தாளாளருமான சி.த.செல்லபாண்டியன் கலந்துகொண்டு 162மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதில், அரசு வழக்கறிஞர் ராஜாராம், முன்னாள் துணை மேயர் சேவியர், பள்ளி உடற்கல்வி இயக்குநர் பெலின்பாஸ்கர், தொழிற்சல்வி ஆசிரியர் பால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்று, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியலும் வேளாண் விற்பனை குழு தலைவர் சி.த.செல்லபாண்டியன் கலந்துகொண்டு 439மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில், காரப்பேட்டை பரிபாலன சங்க நிர்வாகிகள் ராஜாமணி, சந்தனகுமார், மதியழகன், பெத்துபாண்டியன், ஆனந்தகண்ணன், செல்வராஜ், வேலுச்சாமி, பட்டுராஜ், உத்தரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here