ஸ்ரீவை தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கி ஊர்வசிஅமிர்தராஜ் அசத்தல்..!

0
57
congress

தூத்துக்குடி,ஜன.07:

தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வந்த மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜ் மகன் ஊர்வசி அமிர்தராஜ் தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து புதிய தலைவர் ஊர்வசிஅமிர்தராஜ் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தி வருகிறார்.

இதன்படி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகளை, பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு வட்டார தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நலத்திட்ட உதவிகளாக தெற்கு மாவட்ட செயலாளர் உர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், வர்த்தகஅணி தலைவர் டேவிட்பிரபாகரன், முன்னாள் ஓபிசி பிரிவு தலைவர் ஜெயக்கொடி, காங்கிரஸ் எடிசன், ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் சித்திரை, ஐஎன்சியுடிசி பொறுப்பாளரும் வட்டார பொருளாளருமான சந்திரன், வார்டு உறுப்பினர் சிவகளை பிச்சையா, மாவட்ட பொதுசெயலாளர் சீனிராஜேந்திரன்,

வட்டார துணைத்தலைவர் அலங்காரம், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் பிச்சைக்கண்ணன்,மகாராஜன்,அருணாசலம்,வினோத், முன்னாள் நகரதலைவர் பாலசுப்பிரமணியன்,கிழக்கு வட்டார தலைவர் தாசன்,சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரபாகரன் நகரதுணை தலைவர்கள் மதிசேகரன், நிலமுடையான்,மகளி அணி பஞ்சவர்னம்,ராஜாத்தி,ராமலெட்சுமி ,வார்டு செயலாளர் சுப்பையா,பாலாஜி,ஆழ்வை வட்டார தலைவார் பாலசிங்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here