தட்டார்மடம் அருகே ரோந்து சென்ற போலீஸார் மீது தாக்குதல்

0
13
attack

சாத்தான்குளம், ஜன. 7:

தட்டார்மடம் அருகே ரோந்து சென்ற போலீஸாரை தாக்கியதாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தட்டார்மடம் காவல் நிலைய தலைமைகாவலர் கார்த்திக்அருணாசலம்(38), காவலர் ராஜேஷ்(28) ஆகியோர் புதன்கிழமை தட்டார்மடம், படுக்கப்பத்து பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கண்டித்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்த 3 பேர், ஏட்டு கார்த்திக்அருணாசலம் மற்றும் காவலர் ராஜேஷை தாக்கினர். இதில் கார்த்திக்அருணாசலத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவர் அளித்த புகாரின்பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் அய்யப்பன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். இதில் படுக்கப்பத்து கிராமத்தை சேர்ந்த க. பொன்னம்பல நாதன்(45), அவரது சகோதரர் சக்திகுமார்(47) மற்றும் ப. ராஜா(43) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குபதிந்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here