தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளில் மீண்டும் தேர்தல் வரும் – திருச்செந்தூரில் ஹெச்.ராஜா

0
12
dc-Cover-8gfg3im0nnvq5ifs7c16miujk0-20180308022716.Medi

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலின் முடிவிலிருந்து திமுகவின் சரிவு தொடங்கும் என்றும் நடைபெற்று முடிந்த நாடாளுன்ற தேர்தலில் திமுக பொய்யை சொல்லி வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டிய அவர் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றும் எங்களுக்குள் எந்தவிதமான குழப்பங்களும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும்
உயர்வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 % இட ஒதுக்கீட்டினால் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் சமூக நீதி பாதிக்கப்படாமல் மோடி அரசு இதை நிறைவேற்றும் எனவும்
தெரிவித்தார். மேலும் நீட் தேர்வினை கொண்டுவந்ததே காங்கிரஸ் – திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் என குற்றம் சாட்டிய அவர் தமிழகத்தில்
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படியே நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது என்றும் ஜெயலலிதா காலத்தில் கூட நீட் தேர்விற்கு விலக்கு கோரவில்லை என்றும் தற்போது நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து நீட் தேர்விற்கு விலக்கு கோரினால் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். என தெரிவித்த அவர் அதிலும் அரசாங்கம் முடிவு செய்ய இயலாது என்றும் நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்துள்ள வழக்கில் வெற்றி பெறுவோம் என்றும் தமிழகத்தில் தூத்துக்குடி மட்டுமல்லாது நீலகிரி, சிவகங்கை மற்றும் மத்திய சென்னை ஆகிய நான்கு பாராளுமன்ற தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here