தூத்துக்குடி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்

0
145
s.p.shanmuganathan news

தூத்துக்குடி,ஜன.09:

தூத்துக்குடி புனித வளன் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி குருஸ்புரம் புனித வளன் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை கிரேஸ் மேரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வக்குமார், தூத்துக்குடி மாநகர கிழக்குப் பகுதி செயலாளரும் முன்னாள் நகராட்சி சேர்மனுமான மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஆலிஸ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பள்ளியில் பயிலும் 173 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டியை வழங்கி பேசினார். உடன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு,

முன்னாள் வாரியத்தலைவர் அமிர்த கணேசன், மாவட்ட இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் டேக்ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம்,

மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் இந்திரா, பகுதி அம்மா பேரவை செயலாளர் அன்டோ, பகுதி மகளிர் அணி செயலாளர் ஷாலினி, பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன், வட்டக் கழக செயலாளர்கள் வின்சென்ட்,

நிக்கோலாஸ், சங்கர், சந்திரசேகர், முத்துவீரன், மனுவேல் ராஜ், பகுதி சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அசன், மற்றும் வட்டக் கழக பிரதிநிதிகள் விஜயா, மல்லிகா, ஸ்மைலா, காசிராஜன் உட்பட பலரும் இருந்தனர். விலையில்லா மிதிவண்டி யைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நன்றி கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here