தூத்துக்குடி,ஜன.09:
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடவேண்டும், 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை திரும்பபெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பாப்ஹையஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தர்ணா போராட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
தர்ணா போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.