மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை

0
14
amirtharaj

சாயர்புரம், ஜன.09:

மணித்முத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் இந்த ஆண்டு போதி மழை பெய்யாததால் சுமார் 40க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீறின்றி வறண்டு காணப்படுகின்றன. பருவ மழையை நம்பி இங்குள்ள விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் நெல் விதைத்து 60நாட்களுக்கு மேல் ஆகிறது. தற்போது 3வது மற்றும் 4வது ரீச்சில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் இல்லாததால் விதைத்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகும் நிலையில் உள்ளன.

மேலும் குளங்கள் வறண்டு உள்ளதால் இப் பகுதி மக்களின் குடி நீர் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாத நிலை உள்ளது. மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவு நிரம்பியும் சுழற்சி முறைப்படி இந்த ஆண்டு சாத்தான்குளம் தாலுகா 3வது மற்றும் 4வது ரீச் குளங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்கப்படாமல் உள்ளது. எனவே சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்றவும், குடி நீர் தட்டுபாடு ஏற்படாமல் பாதுகாக்கவும் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள 3வது மற்றும் 4வது ரீச்சில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தமிழக முதல்வர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர் ஆகியோருக்கு சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here