நாடார் சமுதாய சாதனையாளர்கள், போராளிகளுக்கு விருது வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

0
11
nadar - edappadi

சென்னை,ஜன.10:

சென்னையில் நாடார் சமுதாய சாதனையாளர்கள், போராளிகளுக்கு விருது வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னையில் இன்று(10.01.2021) நாடார் சாதனையாளர்கள் மற்றும் போராளிகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் நாடார் பிரபலங்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி நாடார் சமுதாய சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கொளரவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மாபாபாண்டியன்ராஜன், கடம்பூர் செ. ராஜு, எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். விழாவில் பேசியவர்கள் ‘நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஆதித்தனார், பி.ஹெச்.பாண்டியன் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியது முதல்வர் எடப்பாடியார்தான் மேலும் நாடார் சமுதாயத்தவருக்கு பல நன்மைகளை எடப்பாடியார் செய்து வருகிறார் அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here