திமுக – காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – தூத்துக்குடியில் விஜய்வசந்த் பேட்டி

0
12
congress

தூத்துக்குடி,ஜன.12:

திமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் பெறும் என தூத்துக்குடியில் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் நேற்று தூத்துக்குடி விமானநிலையம் வந்தார். அவருக்கு காங்கிரசார் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட வர்த்தககாங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் பொன்பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் விஜய் வசந்த், ’’காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளத்தை வலுவாக்கவே புதிதாக நிறைய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு அதிக நன்மைகள் செய்யவேண்டும் என்ற கனவு அப்பாவுக்கு நிறைய இருந்தது. அதனை அவரது மகன் என்ற முறையில் நான் நிறைவேற்ற பாடுபடுவேன். தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.

முதலில் வியாபாரம், பின்பு சினிமா என இருந்தது. சினிமாவுக்கு பொழுதுபோக்காக சென்றேன். ஆனால் தற்போது முழு நேர அரசியலில் மட்டும் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய விரும்புகிறேன். தேர்தலில் அதிமுகவின் மீதுள்ள அதிருப்தி திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றிக்கு வழிவகுக்கும். கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி முழுமையாக பாடுபடும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here