வழக்கமாக தொடங்க வேண்டிய காலத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவில்லை. ஜனவரி 11ம் தேதியோடு வடகிழக்கு பருவ மழை காலம் முடிகிறது. ஆனால் அப்போதுதான் விடாது கருப்பு போல் தொடர்கிறது கடும் மழை. இதை வடகிழக்கு பருவ மழை என்று அழைக்க முடியாது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு தொடரும் மழையால் குளம்,குட்டைகள் மட்டுமல்லாது அணையின் நீர்மட்டமும் அபரீதமாக உயிர்ந்து வருகிறது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு நிலமை ஏற்பட்டிருக்கிறது. நாளை தை பொங்கல் திருநாள் வருகிறது. தமிழர்கள் இல்லங்கள் தோறும் களைகட்டுவது வழக்கம். ஆனால் கெடுபிடியான மழையால் மக்கள் அவதிபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நாளை காலை பொங்கல் திருநாள் கொண்டாத்திற்கு தயாராகும் வேளையில் எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க முடியாமல் திணறுகிறார்கள். ஏற்கனவே கொரோனா பிரச்னையினால் தீபாவளி, கிறிஸ்துமஸ்,புத்தாண்டு என எந்த பண்டிகைகளும் முழுமையாக கொண்டாட முடியாத சூழ்நிலையில் இப்போது தொடர் மழையால் பொங்கல் பண்டிகையும் அதே வரிசையில் சேர்ந்துள்ளது.
இதற்கிடையே வரும் 17ம் தேதி மழை நிற்கும் என்றும் இம்மாத கடைசியில் தொடர் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு மக்களும் அரசும் தயாராக இருப்பது அவசியமாகும்.