தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – அந்தப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் – தூத்துக்குடி கலெக்டர்

0
10
collector

தூத்துக்குடி,ஜன.13:

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அந்தப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம், ’’நெல்லை மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பியதால் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஆற்றில் நிமிடத்திற்க்கு 60ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆற்றின் கரையோர கிராமங்கள் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் வட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படக்கூடிய 7இடங்கள் கண்டறியப்பட்டுபட்டுள்ளன.

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் பகுதியிலுள்ள 20 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததால் தமிழக அரசு காணும் பொங்கலை முன்னிட்டு ஆறுகள், கடற்கரை, சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை.

நிவாரண முகாம்களில் உணவு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here