கோவில்பட்டி : நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்து – சிறுமி உள்பட 2 பேர் பலி

0
12
accident news

தூத்துக்குடி, ஜன.13:

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சத்திரப்பட்டியில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கோவையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற மினி லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோடு ஆட்டோவில் இருந்த நெல்லை மேலைதிடியூரை சேர்ந்த சுமித்ரா(31) யாஷிகா (8) ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் லோடு ஆட்டோவில் வந்த 5 பேர் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவையில் கூலித்தொழில் செய்த நெல்லை பகுதியை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகைக்காக மினி லோடு ஆட்டோவில் வந்தபோது விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் லேத் பட்டறை நடத்தி வருபவர் கோபாலகிருஷ்ணன்(35). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திடீயூர் ஆகும். இவரது மனைவி விஜயா(34). இவர்களுக்கு யாசிகா(8) என்ற மகள், பிரனேஷ்(3) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 10 பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட கோவையில் இருந்து நேற்றிரவு லோடு ஆட்டோவில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர்.

லோடு ஆட்டோவை ஆனந்தராஜ் மகன் பாஸ்கர் (37) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைச்செவல் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதியது. இதில் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.

இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கரின் மனைவி சுமத்ரா (35) மற்றும் கோபாலகிருஷ்ணனின் மகள் யாசிகா(8) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் லேத் பட்டறை உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் (35), அவரது மனைவி விஜயா(34), மகன் பிரனேஷ் (3) லோடு ஆட்டோ டிரைவர் பாஸ்கர், அவரது 4 வயது மகன் ராஜ்குமார், சந்திரசேகர் என்பவரது மகன் பார்த்தீபன்(20), ராதாகிருஷ்ணன் மகள் பிரிதா(20) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், நாலாட்டின் புதூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான சிறுமி உள்ளிட்ட 2பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண் டாட சொந்த ஊருக்கு சென்றபோது விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here