நாசரேத், ஜன.13:
நாசரேத்தில் இளம்பெண்ணை உல்லாசத் திற்கு அழைத்ததாக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாசரேத் ஸ்டேபிளி தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் சாமு வேல் மகள் சில்வியா பியூலா (வயது 36).இவரது கணவர் பெயர் ராஜதுரை. இவருக்கு திருமண மாகி பிரைட்டன் என்ற பையன் உள்ளார். கடந்த 14 வருடங்களாக இவர் கணவரை பிரிந்து தாய் சந்திராபுளோரா,மகன் பிரைட்டன் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
இவர் கணவரை பிரிந்து வாழ்வதால் அஜஸ்டஸ் ரவி என்ற துரை,ஜெரால்டு ஆகியோர்அடிக் கடி தவறான எண்ணத்தில் வா ஜாலியாக இருக்கலாம் என கூப்பிட்டதாகவும் இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரிகள் அசிங்கமான வார்த் தையால் பேசியதாகவும் கண்ட வர்களுடன் போறீயே எங்களு டன் வா என்று கூறி பெண் என்று பாராமல் கீழே தள்ளி விட்டதால் மேற்படி இரண்டு பேர்கள் மீது புகார் கொடுத்ததின் பேரில் உதவி ஆய்வாளர் தங்கேஸ்வரன் வழக்கு பதிந்து இரண்டு பேரை யும் கைது செய்தார்.