கூட்டாம்புளி ஆதரவற்றோர் இல்லத்தில் சமத்துவ பொங்கலிட்டார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

0
90
s.p news

தூத்துக்குடி,ஜன.14:

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாமபுளியில் உள்ள ‘அன்பு உள்ளங்கள்” என்ற இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்;, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஆகியோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி அன்னை தெரஸா நகரில் ‘அன்பு உள்ளங்கள்” என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 96 பேர், மாற்றுத்திறனாளிகள் 10 பேர், முதியோர்கள் 16, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 13 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட ஆதவற்றோர்கள் உள்ளனர்.

இதையறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தமிழர் திருநாளான இன்று (14.01.2021) தைப்பொங்கல் விழாவை மேற்படி ‘அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாடினார். பின் அவர்களுடன் ஆறுதலான வார்த்தைகள் கூறி கனிவுடன் உரையாடி அங்கிருந்த ஆதரவற்றோர் 166 பேருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார்.

இந்த ஆதவரற்றோர் இல்ல நிர்வாகி விஜயா சத்யா சாமுவேல், நிர்வாக உதவியாளர் தீபா, சமூகப்பணியாளர்கள் மார்ட்டின் மற்றும் சுரேஷ், வார்டன்கள் அமல்ராஜ், பிரவீன், கீதா மற்றும் செண்பகம், செவிலியர்கள் சாரதா மற்றும் சத்யா உள்ளிட்ட காப்பகத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ், புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானராஜன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகரஜன், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு ஆகியோர் உடனிருந்து இப்பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here