தூத்துக்குடியில் வைகோவிற்கு வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய அதிமுக உறுப்பினர்

0
30
வைகோ

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி அதிமுக உறுப்பினர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டியிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக 3 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்தார். 

ஆனால், தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று பிணையில் உள்ள வைகோவுக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, அவரது மனு நிராகரிக்கப்படலாம் என பரவலாகப் பேசப்பட்டது. 

இதனால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது. 

திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. எனவே, வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் உள்ள சிக்கல் நீங்கி உள்ளது.

 எனவே, வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியானநிலை ஆனதால் மதிமுகவினர் மகிழ்ச்சியாய் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விற்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி மாநகர் முழுவதும் அதிமுக உறுப்பினர் வக்கீல் ஜோசப் செங்குட்டவன் சுவரொட்டி ஒட்டி இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.வக்கீல் ஜோசப் செங்குட்டுவன் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் மதிமுக செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here