நாசரேத், ஜன. 16:
பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
குரும்பூர் அருகே உள்ள பணக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி ஆட்சி மன்றக்குழு தலைவர் துரை சுரேஷ்ராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். தமிழாசிரியர் ராஜ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பள்ளி செயலாளர் சுப்பு ஆன்லைன் வகுப்பில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில் துணை தலைமையாசிரியர் சுரேஷ் காமராஜ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணை தலைமையாசிரியர் ஜெசுதாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொருளாளர் ஜெகன்மோகன் செய்திருந்தார்.