துப்பாக்கியால் சுட்டு கொன்று காளை மாடு இறைச்சி திருட்டு – திருச்செந்தூர் அருகே சம்பவம்

0
925
ticr

திருச்செந்தூர், டிச. 25

திருச்செந்தூர் அருகே துப்பாக்கியால் சுட்டு மாட்டை கொன்று கறிக்காக எடுத்து சென்றதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரம் மேலத்தெரு நடராஜன் மகன் முனீஸ்வரன்(30). மாடுகளை வளர்ந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 24ம் தேதி திருச்செந்தூர் – திருநெல்வேலி ரோட்டில் ராணிமகாராஜபுரம் காட்டுப்பகுதியில் நள்ளிரவு காளை மாடு இறந்து கிடந்தது. அதன் கழுத்த பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தற்கான அடையாளம் இருந்தது. மாட்டின் பின்பக்க இரண்டு கால்பகுதிகளையும் கறிக்காக வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது.

இறந்த மாட்டை கால்நடை டாக்டர் செந்தில்கண்ணன் பிரேத பரிசோதனை செய்தார். அதில் துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து முனீஸ்வரன் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். மாட்டை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம ஆசாமிகளை இன்ஸ்பெக்டர் முத்துராமன் தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here