நாசரேத், ஜன.16:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னிலையில் நாசரேத் வட்டார இளைஞர்கள் பலர் அதிமுக வில் இணைந்தனர். நாசரேத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாசரேத் நகர எம்ஜிஆர் இளைஞ ரணி செயலாளர் கராத்தே டென்னிசன் மற்றும் கழக பிரமுகர் பெரியதுரை ஆகியோர் முன்னி லையில் டேல்வின்,ரஞ்சித்,சாம் ,ரமேஷ்,முகேஷ், கிஷோர்,அதிசயராஜ்,ராபர்ட், வசந்த், அஜேய், முரளி,ராஜி ,ராபின்,மனோஜ் ஏராளமான இளை ஞர்கள் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏயை பண்டாரவிளை யில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.அவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி யில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜ யகுமார்,ஆழ்வை ஒன்றிய மேற்கு செயலாளர் செம்பூர் ராஜ்நாராயணன், தென்திருப்பேரை எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கந்தன், வெள்ளரிக்காயூரணி அதிமுக பிரமுகர் முனி யாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் நகர இளம் பெண்கள் பாசறை இணைச்செயலாளர் அலெக்ஸ் செய்திருந்தார்.