குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி விவகாரம் : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

0
101
vivasayam

டெல்லி,ஜன,17:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது பல்வேறு காரணங்களால் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் குடியரசு தினத்தில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “குடியரசு தின பேரணி நடைபெறும் நாளில் டிராக்டர் பேரணி நடத்தி இடையூறு ஏற்படுத்தினால் அது நம் நாட்டுக்கு தர்மசங்கடமாக இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு மத்திய அரசு தடை கோரியுள்ளது.

இந்த மனு நாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அர்விந்த் போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here