நாசரேத்,ஜன.17:
வனத்திருப்பதியில் தைப்பொங்கலைமுன்னிட்டு சிறப்பு தரிசனம் நடை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள வனத்திருப்பதி புன் னை ஸ்ரீனிவாசப்பெருமாள், ஸ்ரீ ஆதிநாராயணர் சிவனைந்தப்பெ ருமாள்கோவிலில் தைப் பொங் கலை முன்னிட்டு வியாழக்கிழ மை அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4:45 மணி க்கு கோபூஜை, 5 மணிக்கு மூலவ ருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்), காலை 7 மணிக்கு சகஸ்கரநாம அர்ச்சனை, 8 மணிக்கு சிறப்பு அலங்கார சேவை, காலசந்தி பூஜை, திருவாதரனம், சாத்து முறை கோஷ்டி, பகல் 11:30 மணி க்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்கர நாம அர்ச்ச னை, மாலை 6 மணிக்கு சாய ரட்சை பூஜை நடைபெற்றது.
15.01.2021 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறப்பு, 6:15 மணிக்கு கோ பூஜை,காலை 7மணிக்கு சகஸ்கரநாம அர்ச்ச னை,8 மணிக்கு காலசந்தி பூஜை, 8:30மணிக்கு மூலமந்திரஹோமம் தொடர்ந்து உற்சவர் திருமஞ்ச னம், பகல் 11:30 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்கரநாம அர்ச்சனை,மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடை பெற்றது.பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை சென்னை ஓட்டல் சரவண பவனின் இனிப்பு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனரும், நிர்வாக கைங்கர்யதாரருமான பி.ராஜ கோபால் மகன்கள் பி.ஆர்.சிவக் குமார், ஆர்.சரவணன் ஆகியோர் உத்திரவின் பேரில் கோவில் மேலாளர் டி.வசந்தன் செய்திருந்தார்.