தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 104வது பிறந்தநாள் விழா – எம்.ஜி.ஆர் 100 ஆண்டு விழா குழு ஏற்பாடு

0
50
admk

தூத்துக்குடி, ஜன.19:

தூத்துக்குடியில் அ.தி.மு.க.நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக்குழு சார்பில் மடத்தூர் சாலை முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. அதற்கு தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா குழு எஸ்.மோகன் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு குழு மு.பாலகிருட்டிணன், தூத்துக்குடி மாநகர பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.சாமுவேல் ஆகியோர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்னம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு குழு ஆசைத்தம்பி, பழனி, கைலாஷ் வின்சென்ட், அப்பாஸ், ஹார்பர் வின்சென்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு குழு, தூத்துக்குடி மாநகர பகுதிஎம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.சாமுவேல் சிறப்பாக செய்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here