தூத்துக்குடியில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

0
35
news

தூத்துக்குடி,ஜன.20:

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடக்கிறது.

தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல் தெருவிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும், இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதார்கள் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இதுதொடர்பான விபரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here