தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார்

0
74
agri news

தூத்துக்குடி,ஜன.21:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப்பயிறு, சோளம், மக்காச்சோளம், கம்பு, மிளகாய் போன்ற மானாவாரி பயிர்கள் அழுகி சேதமானது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேத கணக்கீடு பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை தமிழக அரசின் வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு மற்றும் பயிர்சேதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தினைத்தொடர்ந்து வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் பயிர்சேத விபரங்களை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவில், பயிர் சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் அரசு உரிய முடிவு எடுக்கும்.

விவசாயிகளுக்கு தமிழக அரசின் பயிர் இழப்பீட்டுத் தொகையும், பயிர் காப்பீடு தொகை கிடைப்பதற்கான பணிகள் ஒருங்கே நடைபெற்று வருகிறது என்றார். விளாத்திகுளம் பகுதிக்கு சென்ற வேளாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி, கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ சின்னப்பனுடன் சென்று பயிர் சேதங்களை பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here