தூத்துக்குடி அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆடிட்டோரியம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்.பி., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு ஆடிட்டோரியத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி தொழில் வளர்ச்சிக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். தூத்துக்குடியில் கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களால் இங்கு வந்து தொழில் துவங்கிட தொழில்முதலீட்டாளர்கள் தயங்கி வருகின்றனர். இதனையெல்லாம் சரி செய்து வரும் காலங்களில் தூத்துக்குடியில் தொழில்வளர்ச்சி மேம்படவும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கும் உதவியாக இருப்பேன் என்றார்.
இதில், கீதாஜீவன் எம்.எல்.ஏ., திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைத்தலைவர் சிதம்பரநாதன், பொதுமேலாளர் ஆறுமுகபாண்டியன், சங்க தலைவர் ஜோபிரகாஷ், பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து, சங்க துணைத்தலைவர் பாலு, தொழிலதிபர்கள் ஏவிஎம்வி மணி, வேல்சங்கர், விவேகம்ரமேஷ், தமிழரசு, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.