தூத்துக்குடி,ஜன.25:
தூத்துக்குடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தனராஜ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மருமகன் டாக்டர் விஜய்தனராஜ் லண்டனில் மருத்துவம் பயின்று கடந்த 16 ஆண்டுகளாக அங்கேயே சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்தார். தற்போது தூத்துக்குடி திரும்பியுள்ள டாக்டர் விஜய்தனராஜ், தனது தந்தை பிரபல மருத்துவர் தனராஜுடன் இணைந்து சிதம்பரநகரில் அனைத்து வசதிகள் கூடிய தி தனராஜ் சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளார். அதன் திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி ஜெயக்குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், எம்.எல்.ஏ சின்னப்பன், மாவட்ட அறங்காவலர்குழுத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் செல்வக்குமார், டாக்டர் அருள்ராஜ்,மெர்கன் டைல் வங்கி முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன், தொழிலதிபர் டி.ஏ.தெய்வநாயகம், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திருப்பாற்கடல், செரினா பாக்கியராஜ்,சந்தனம், மாவட்ட அணி செயலாளர்கள் வீரபாகு, ஏசாதுரை, பிரபாகர், தனராஜ், டாக் ராஜா, விக்ணேஷ், அருண்ஜெபக்குமார், பகுதிச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பொன்ராஜ், நட்டார்முத்து, மேற்கு பகுதி துணைச்செயலாளர் கணேசன், மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன் மற்றும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை தி தனராஜ் மருத்துவமனை தலைவர் டாக்டர் தனராஜ், வசந்தி தனராஜ், டாக்டர் விஜய் ஆனந்த் ஹரிகிருஷ்ணன், டாக்டர் சங்கீதாதனராஜ், டாக்டர் விஜய் தனராஜ், கலையரசி சண்முகநாதன் மற்றும் ஆஷா சண்முகநாதன், டாக்டர் சிவகுமார், புவனேஸ்வரி சிவகுமார், அசோக், பொன்னரசி அசோக், டாக்டர் நிதின், தமிழரசி நிதின், டாக்டர் பிரவீன், பொன்ரேகா பிரவீன், எஸ்.பி.எஸ்.ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர்.