தூத்துக்குடியில் நடந்த குடியரசு தின விழாவில் 106பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 69லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் முனனிலையில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
தொடர்ந்து, காவல்துறை, கொடிநாள் நிதி வசூலை சிறப்பாக செய்தவர்கள், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 353பேருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
குறிப்பாக, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சித்த மருத்துவர்கள் வல்லநாடு செல்வக்குமார், கருங்குளம் ரதிசெல்வம் காமராஜ் கல்லூரி என்.எஸ்.எஸ்.அலுவலர் தேவராஜ், வடகிழக்கு பருவமழையின் போது சிறப்பாக பணியாற்றிய குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன்துரைமணி, அய்யனடைப்பு பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கினார்.
கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 69லட்சத்து 34ஆயிரத்து 553 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
இதில், கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன், சப்&கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, மருத்துவக்கல்லுரி முதல்வர் ரேவதி, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை, ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, பறக்கும் படை தாசில்தார் ஞானராஜ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.