நாசரேத் சுற்று வட்டாரத்தில் குடியரசு தின விழா!

0
218
nazareth news

நாசரேத்,ஜன.27:

மூக்குப்பேறி ஊராட்சியில் குடியரசு தினவிழா

மூக்குப்பீறி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் கமலாகலையரசு தேசியகொடியேற்றினார். துணைத்தலைவர் தனசிங் இனிப்பு வழங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரீட்டா, பிச்சைகனி, கிரேஸ், பாலசுந்தர், அந்தோனி கிறிஸ்டி, பாக்கியசீலி,கலையரசு மற்றும் மகளிர் குழுவினர்,சுகாதாரப்பணியாளர்கள் ஊர்பொது மக்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஊராட்சிசெயலாளர் வேதமாணிக்கம் செய்து இருந்தார்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் மடத்துவிளை டி.என்.டி.டி.ஏ.துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசுதினவிழாவில் பள்ளித்தாளாளர் டேனியல் எட்வின் கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் உதவிகுரு சிமியோன் டேனியல் பிரபு, மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.

72-வது குடியரசுதினத்தை முன்னிட்டு நாசரேத் காவல்நிலையத்தில் ஆய்வாளர் விஜயலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் தாளாளர் சசிகரன் தலைமைதாங்கி தேசியக் கொடியேற்றினார். சிறப்பு விருந்தினராக தொழில்அதிபர் மொஹமட்சலீம் கலந்துகொண்டார்.முதல்வர் முனைவர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். பேராசிரியர் ஸ்டான்லி நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஜோஸ் சுந்தர் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

ஒய்.எம்.சி.ஏ. நாசரேத்தில் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். பின்னர் ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் சிரில்ரூபன், செயலாளர் ராஜேந்திரன், ஜோதி டேவிட், மர்காஷிஸ், சித்தர் ராஜா, சைமன், செந்தில், அருண் சாமுவேல் என்ற தம்பு, இம்மானுவேல், ஜெகன், தனபால், ஜெரால்டு, எமர்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் அகப்பைக்குளம், டி.என்.டி.டி.ஏ. துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் பொன்ராஜ் தேசியக் கொடியேற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் சௌந்திரபாண்டியன், அல்பர்ட் பாஸ்கரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தலைமையாசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காஷிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் 72-வது குடியரசு தினம் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். நாசரேத் கிராம நிர்வாக அதிகாரி முத்துராமன் கலந்து கொண்டு, தேசிய கொடி ஏற்றி, குடியரசுதின உரைநிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்டோமொபைல்துறைத்தலைவர் ஜான்வெஸ்லி உறுதிமொழி வாசித்தார் கல்லூரி பேராசிரியர் முத்துசந்திரசேகர் நன்றி கூறினார். நிகழ்ச்சி களை விரிவுரையாளர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின்தாளாளரும்,தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலகல்லூரிகளுக்கான நிலவரக்குழு செயலருமான ஜெபச்சந்திரன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், உதவி முதல்வர் ஐரின் நிஷானி, பேராசிரியர் ரூபன், ஜெசுடியாள் செல்வின் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் தேசியக் கொடியேற்றினார். நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதல்வர் முன்னிலையில் தாளாளர் அரிமா புஷ்பராஜ் தேசியக் கொடியேற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here