செய்துங்கநல்லூர், ஜன.27:
கொரோனா தடுப்பு பணியின் போது சிறப்பாக செயல்பட்ட கருங்குளம் வட்டார மருத்துவ பணியாயளர்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், நோய் தடுப்பு பணியில் சிறப்பான மருத்துவ பணியாற்றிய கருங்குளம் வட்டார மருத்துவ பணியாளர்களுக்கு குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கருங்குளம் வட்டாரத்திற்குட்பட்ட வல்லநாடு மற்றும் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்துவரும் மருத்துவர் கிஷோர்கௌதம், சித்த மருத்துவர்கள் வல்லநாடு செல்வக்குமார், கருங்குளம் ரதிசெல்வம், மருந்தில்லா மேற்பார்வையாளர் இளங்கோ ராஜன், செவிலியர் பால்தங்கம், ஆய்வக நுட்பனர்கள் சுபா, ராஜேஸ்வரி, ராம்தாய் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
நற்சான்றிதழ் பெற்ற மருத்துவப்பணியாளர்களை மாவட்ட துணை இயக்குனர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பாராட்டினர்.