தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப பணியாளர்கள் வலியுறுத்தல்

0
34
news

தூத்துக்குடி, ஜன.27:

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்கள் சிறு விடுப்பு போராட்டம் நடத்தினர்.

அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கவேண்டும், மாவட்டங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று தமிழகம் முழுவதும் சிறு விடுப்பு எடுக்கும் போராட்டத்தினை நடத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் விடுமுறை எடுத்து பணிக்கு வரவில்லை. பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here