தூத்துக்குடி,ஜன.27:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி யான எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 27.12.2020 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் முதல்நிலைக் காவலர் தாமஸ் பால்ராஜ்; ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 18.01.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை 48 மணி நேரத்தில் கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,20,000 – மதிப்புள்ள சுமார் 3 பவுன் தங்கச்செயின் 2 ஜ கைப்பற்றிய ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வளர் சங்கர், மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ராஜா, காவலர்கள் பாலமுருகன், கணேசன் மற்றும் கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதி கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 30 மூடை ஆற்று மணலை கடத்தி வந்த வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்த விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர் அல்போன்ஸ் மரிய ராஜா மற்றும் காவலர் கதிர்வேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து ரூ. 90,000 மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றிய கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் அருண் விக்ணேஷ் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவலர் ரமேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
2020 ஆம் ஆண்டில் 125 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த சேரகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பிரமணியன் மற்றும் ஆயுதப்படை காவலர் சுந்தரவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இப்பாராட்டு நிகழச்சியின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.