போலீஸை கத்தியால் வெட்டியதை சிறிதாக்கி, வெட்டியவரை போலீஸார் அமுக்கி பிடித்ததை பெரிதாக்கும் மீடியாக்கள்

0
128
police news

மத்தியரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்மை திருத்த மசோதாவுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 நாட்களுக்கு மேல் நடத்தப்பட்டு விட்ட போராட்டம் வன்முறை மயமாக நடத்தப்பட்டு வருகிறது.

குடியரசு தினத்தன்று டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகளில் பலர் செங்கோட்டையில் அமைப்பின் கொடியேற்றியது, போலீஸார் மீது தாக்கியது, விவசாயிகள் மீது போலீஸ் தாக்கியது என பல சம்பவங்கள் குடியரசு தினத்தன்று நடந்துவிட்டது. நல்லவேலையாக போலீஸாரின் கட்டுப்பாடான நடவடிக்கையால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அந்த டெல்லி போலீஸாருக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் திரண்டனர். விவசாயிகளின் போராட்டம் இடையூறாக இருப்பதாக அவர்கள் கூறினர். திரண்டு வந்த அப்பகுதி மக்கள், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை கலைந்து போகும்படி கேட்டனர். அவர்கள்மறுக்கவே கற்களால் அடித்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பும் கற்களை கொண்டு தாக்கி கொள்ளும் தகவல் அறிந்து போலீஸார் அங்கு சென்றனர். இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்ற போலீஸார், ஒரு கட்டத்துக்கு மேல் கண்ணீர் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதால், கற்கள் வீசுவதை நிறுத்துங்கள் என போலீஸ் அதிகாரி பாலிவால் என்பவர் கேட்டுக் கொண்டார். இதில் ஆத்திரமடைந்த விவசாய போராட்டத்தில் இருந்த ரஜ்சித்சிங்(22) என்பவர் போலீஸை கத்தியால் வெட்டினார். அத்துனை போலீஸார் நிற்கும் போது அவர்கள் மத்தியில் ஒரு போலீஸ் மீது வெட்டு விழுந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அந்த நபரை வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அதில் இருந்த 44 பேர்கள் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீஸை வெட்டியவர் பஞ்சாப் மாநிலம், நயாசேகார் மாவட்டத்தை சேர்ந்தவர். வெட்டுபட்ட போலீஸ் அதிகாரி அலிபூர் போலீஸ் ஸ்டேசனை சேர்ந்தவர்.

இந்த தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. போலீஸ் அதிகாரியை வெட்டிய சம்பவத்தை பட்டும் படாமலும் சொன்ன சமூக வலைதளம் மற்றும் மீடியாக்கள், வெட்டியவரை போலீஸார் அமுக்கி பிடித்ததை பெரிய கொடூரமாக சித்தரித்தன. அமெரிக்காவின் மின்னாபோலீஸ் நகரில் கடந்தாண்டு மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை போலீஸார் கழுத்தில் மிதித்ததிலவர் மூச்சு திணறி இறந்த சம்பவத்தை இந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பீதியை கிளம்ப்பி வருகின்றன.

போலீஸாரை கத்தியால் வெட்டியதும் தவறு, வெட்டியவரை கொடூரமான முறையில் பூட்ஸ் காலால் மிதித்ததும் தவறுதான். இந்த இடத்தில் அந்த நபரை ஏன் அந்த அளவிற்கு பூட்ஸ் காலால் மிதித்தார்கள்? என்று பெரிய ஆய்வு எல்லாம் நடத்த வேண்டியது இல்லை. அவர் கையில் ஆயுதம் இருக்கிறது. அதுவும் ஏற்கனவே அவர் வெட்டிவிட்டார். அப்படியிருக்கும்போது அவருடைய அடுத்த முயற்சியை முடக்கினால்தானே அவர் முன்னே நிற்பவர்கள் தப்பிக்க முடியும்? நிலமை இப்படி இருக்கும்போது அதிகாரியை வெட்டிய தகவலை சிறிதாக்கி, அதிகாரி வன்முறையாளனின் கழுத்தி காலால் மிதித்தார் என்பதை மட்டும் பெரிதாக சித்தரித்துக் காட்டும் மீடியாக்களை என்ன வென்று சொல்ல?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here