தூத்துக்குடி,ஜன.30:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் தேசப்பிதா மகாத்மாகாந்தியின் 73 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் காங்கிரஸ் மாநில செயலாளர் சிந்தியா வயலட் லில்லி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஓபிசி தலைவர் ஜெயகொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பஞ்சாயத் ராஜ் சங்கதன் தலைவர் பாரகன் அந்தோணிமுத்து, டிசிடியூ தலைவர் சிவராஜ் மோகன், ஐ.என்.டி.யூ.சி உப்பு சங்க மாவட்ட தலைவர் காங்கிரஸ் எடிசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மிக்கேல் குருசு, சுந்தர்ராஜ், சம்சுதீன், ராஜபாண்டியன், ஏசுதாஸ், சேவியர் மிசியர், நேரு, அல்போன்ஸ், முத்துராஜா, மரிய செல்வராஜ், முத்துராஜ், ஜெயகுமார், தனுஷ்லாஸ், ஐ.என்.டி.யூ.சி உப்பு சங்க செயலாளர் ஸ்டாலின் ராஜ், சாந்தி, உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்..