இடையன்விளையில் ஸ்தோத்திர பெருவிழா!

0
159
nazareth news

நாசரேத்,டிச.29:இடையன்விளையில் நடந்த ஸ்தோத்திரப் பெருவிழாவில் நாசரேத் சுற்று வட்டார மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாசரேத்அருகிலுள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 71-வது ஆண்டு ஸ்தோத்திர பெருவிழா நடைபெற்றது.மூக்குப்பீறிசேகரகுரு ஜெரேமியா ஆரம்பஜெபம் செய்தார்.இம்மானுவேல் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். பொன்சீலி சாமுவேல் வரவேற்றார்.

தூத்துக்குடி இயேசுவின் அக்கினி ஊழிய நிறுவனர் கார்த்திக் கமாலி யேல் தேவசெய்திகொடுத்து சிறப்புபிரார்த்தனை செய்தார்.சிறப்புபாடல்கள்,சாட்சிகள் இடம்பெற்றன.விழாவில் இடையன்விளை,நாசரேத் மற்றும் சுற்றுவட்டாரமக்கள் திரளா னோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்சீலி சாமுவேல் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here