விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த டில்லி போலீசார், அவர்களது குடும்பத்தினர் போராட்டம்

0
139
delhi news

புதுடில்லி, ஜன.30:

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த டில்லி போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதனை தடுக்க முயன்ற போது, போராட்டக்காரர்கள், கத்தி மற்றும் கம்புகளை கொண்டு போலீசாரை கடுமையாக தாக்கினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டில்லி போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் இணைந்து டில்லியில் ஷாகீதி பூங்காவில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை காவலர் அசோக் குமார் கூறுகையில், செங்கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். நுழைவு வாயிலில் பணியில் இருந்த போது, செங்கோட்டையில் கொடியேற்றியவர்களை, வெளியேற்ற முயன்றோம். அப்போது அவர்கள் எங்களை தாக்கினர். கத்தி மற்றும் கம்புகளை கொண்டு தாக்கினர். இதில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பிஎஸ் மாடல் நகர் போலீஸ் ஸ்டேசனில் தலைமை காவலராக பணிபுரியும் சுனிதா கூறுகையில், முபாராகா சவுக் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு துணை மற்றும் உதவி கமிஷனர்களும் பணியில் இருந்தனர். அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டும் செல்லுமாறு போராட்டக்காரர்களிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர்கள் தடுப்புகளை உடைத்து கொண்டு எங்களை கடுமையாக தாக்கினர். வாகனங்களை சேதப்படுத்தினர். அவர்கள் எங்களை தாக்குவார்கள் என தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here