பிப்ரவரி 1ம் தேதி முதல் வழக்கம்போல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் – தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

0
54
collector

தூத்துக்குடி, ஜன.30:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வழக்கம்போல நடைபெறும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஏற்கனவே இருந்த நடைமுறை அடிப்படையில் வழக்கம்போல நடைபெறும்.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்துகொள்ளவேண்டும். வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தவறாமல் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போனுடன் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here