தூத்துக்குடி, ஜன.30:
தூத்துக்குடியில் மனித நேய வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டத்தில் மனித நேய வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் நிறைவு விழாவிற்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா தலைமை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு, மனித நேய வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, பாட்டு, கட்டுரை, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
இதில், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., பழனிகுமார், தலைமையாசிரியர்கள் சங்கரகுமார், வரதராஜன், தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அழகர் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.