தூத்துக்குடியில் கிராமிய கலைப்பயிற்சி தொடக்க விழா – மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

0
86
thoothukudi s.p

தூத்துக்குடி, ஜன.30:

தூத்துக்குடி சிதம்பர நகரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பில் கிராமிய கலைப்பயிற்சி தொடக்க விழா நடந்தது. மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சிதம்பர நகரில் தமிழன்டா கலைக்கூடம் சார்பில் கிராமிய கலைப்பயிற்சி தொடக்க விழா மற்றும் மறைந்த கிராமிய கலைஞர்கள் படத்திறப்பு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் கலந்துகொண்டு கிராமிய கலைக்கூடத்தை திறந்து வைத்தார். அமமுக மாநில மகளிர் அணி செயலாளர் சண்முககுமாரி சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஆட்டோ வாகன பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், டி.எஸ்.பி.க்கள் தூத்துக்குடி கணேஷ், கோவில்பட்டி ககலைக்கதிரவன், விளாத்திகுளம் பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜன், போக்குவரத்து மயிலேறும்பெருமாள், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், வக்கீல் தொண்டன்சுப்பிரமணி, மத்திய வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் செந்தில் ஆறுமுகம்,

தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சுந்தரவேல், மக்கள் நீதி மைய மத்திய மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், இசையமைப்பாளர் சீலன்ஸ்ரூதி, ஆல்கேன் டிரஸ்ட் தலைவர் மோகன்தாஸ்சாமுவேல், குருதி கொடையாளர் ஜெயபால், தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் செயலாளர் திருமணிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here