உழவர் உற்பத்தியாளர் குழுவை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்

0
35
vivasayam

தூத்துக்குடி, ஜன.30:

உடன்குடி பகுதியில் உழவர் உற்பத்தியாளர் குழுவை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உடன்குடி வட்டாரத்திற்குட்பட்ட பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் கிராமத்தில் 20விவசாயிகளை கொண்ட ஒரு ஆர்வலர் குழுவும், பரமன்குறிச்சி கஸ்பாவில் ஒரு ஆர்வலர் குழுவும், செம்மறிக்குளத்தில் மூன்று ஆர்வலர் குழுவும் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து 100விவசாயிகளை கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் கென்னடி தலைமை வகித்தார். உழவர் உற்பத்தியாளர் குழு பொருளாளர் குமரகுருபரன் வரவேற்றார்.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் சரஸ்வதி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுவினை தொடங்கி வைத்து, குழுவிற்கான பேரேடுகளை உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சுகுமாரிடம் வழங்கினார். மேலும், இந்த குழுவிற்கான நோக்கங்களையும் சட்ட திட்டங்களையும் எடுத்துரைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5லட்சம் மானியத்துடன் விவசாய இயந்திரங்கள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

இதில் உடன்குடி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு)பாண்டியராஜன், உழவர் ஆர்வலர் குழு நிர்வாகிகள் மேகநாதன், சிவகுமார், ராஜதுரை, பால்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மதர் சமூகசேவை நிறுவன ஒருங்கினைப்பாளர் பானுமதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூகசேவை நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here