தூத்துக்குடி மாநகரில் தானியங்கி முறையில் வாகன எண்களை பதிவு செய்யும் கேமராக்கள் – எஸ்.பி., ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

0
24
thoothukudi s.p

தூத்துக்குடி,ஜன.30:

தூத்துக்குடி மாநகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி முறையில் வாகன எண்களை பதிவு செய்யும் கேமராக்களை எஸ்.பி., ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, தென்பாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி வி.இ.ரோடு சந்திப்பு, அண்ணா நகர் மெயின்ரோடு சந்திப்பு, வி.வி.டி சிக்னல் சந்திப்பு மற்றும் லெவிஞ்சிபுரம் சிசிஜி காலனி ஆகிய 4இடங்களில் புதியதாக16 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வி.விடி சிக்னல் சந்திப்பில் தானியங்கி முறையில் வாகனங்களின் பதிவு எண்களை ஸ்கேன் செய்திடும் வகையிலான நவீன கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேமராக்கள் அனைத்தும் தென்பாகம் காவல் நிலையத்திலுள்ள மின்திரை மூலம் 24 மணி நேரமும் கண்காணித்திடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நகர் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகள் எனப்பல்வேறு பகுதிகளிலும் கடந்த 6மாத காலங்களில் 6ஆயிரத்திற்கு மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில், வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தானியங்கி முறையில் வாகன எண்களை பதிவு செய்திடும் வகையிலான நவீன கேமரா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் அப்பகுதியில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களின் எண்களையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் பதிவு செய்யப்ட்ட வாகனங்களின் விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இந்த தானியங்கி வாகன எண்களை பதிவு செய்யும் கேமரா மாவட்டத்தில் முதன்முறையாக தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பில் தான் நிறுவப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதுபோன்ற நவீன கேமராக்கள் மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் நிறுவுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில், டி.எஸ்.பி.க்கள் கணேஷ், பிரகாஷ், கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் ஜெயபிரகாஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், சப்&இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here